அவளோடு நான் இருந்தாள் /part -4/ seenudpedia

     

                     பேசிய நாள் அன்று



             இரண்டு ஆண்டுகள் கழிந்து  ஒரு நாள் பயணிக்கும் போது என் நண்பனை கண்டேன்,    அவனிடம் நான் நேசித்த அந்த பெண்ணின் தொலைபேசி எண்னை இருக்குமா எற்று கேட்டேன், இருக்கிறது,என்று சொன்னதும் அவளின் போன் எண்களை வாங்கிகொண்டேன்.

        அழைப்பணை எண் நிரப்பும் போது எனக்குள் ஒரே தயக்கம் பிறகு, அழைப்பணை எடுத்த அவள் யார் என்று கேட்டாள்

         "ஒரே பதற்றம் "

        என் விவரங்களை அவளிடம் கூறியபோது      அவளும் புரிந்து கொண்டாள், பிறகு  என்ன இதுவரை பேசாத ஆள் இப்போது என்று கேட்டாள் தெரியவில்லை, ஆனால் எனக்குள் பதற்றம் மட்டும் இருந்து எனக்கூறினேன்.

       "நீங்கள் என் பேசவில்லை என்று கெட்ட போது அவளும் இதை தான் கூறினால், எனக்குள் சில தயக்கம் என்று ,அவளிடம் பேசிக்கொண்டே,அப்படியே ஒரு வருடம் கடந்து, இதில் இரவு முழுக்க பேசி இருக்கோம், விடியலும் தெரியா வில்லை பொழுதும் புரியவில்லை, ஆனால் அவளுக்கும் என் மீது நேசம் இருப்பதை தெரிந்து கொண்டேன், ஒரு நாள் நேரில் சந்திக்கலாம் என்று முடிவு எடுத்தோம்

      அவள் அருகில் வேலை செய்வதாக கூறினால், அங்கு ஒரு தேனீர் கடையில் சந்திக்கிலாம் என்று கூறிவிட்டு அன்று உறங்க சென்று விட்டேன், இரவெல்லாம் உறக்கம் இல்லை எனக்குள் இருக்கும் காதலை நாளைக்கு எப்படி சொல்வேன் என்று எனக்குள் நினைக்கும் போதெல்லாம் பதற்றமும் சில தயக்கமும் இருந்து.    

        அடுத்தநாள் எப்படியாவது காதலை சொல்லி விடலாம் என்று எனக்குள் தைரியம் வரவைத்துக் கொண்டு இருவரும் இருக்கையில் அமர்ந்து கொண்டு தேனீர் அருந்தி கொண்டு இருந்தோம், அப்பொழுது மாலை நேரம் மழை சாரல் தூவியது எனக்குள் புத்துணர்ச்சி சில தைரியாத்தோடு நான் எனது காதலை கூறினேன், பிறகு அவளிடம் எந்த பதிலும் இல்லை, அவள் அங்கு இருந்து பேசாமலே எழுந்து எதுவும் சொல்லாமல்  சென்று விட்டாள் 


         அடுத்து - 5 (கவிதை )

              6 - மீண்டும் தொடரும்

        ( எழுத்தாளர் ) த. சீனு

       www.seenudpedia.com

          


Comments

Popular posts from this blog

அவளோடு நான் இருந்தால் /பகுதி -1/சிறிய காதல் கதை Seenudpedia